எழுதி வெச்சுக்குங்க.. 2024-ல எல்லாருடைய வீட்டுலயும் இந்த Xiaomi TV S85 Mini LED இருக்கும்.
Xiaomi TV S85 Mini LED விவரக்குறிப்புகள்: இந்த டிவியில் மினி LED பேனல் உள்ளது. குறிப்பாக சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் 1200 நிட்ஸ் பிரைட்னஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த டிவியின் வடிவமைப்பில் சியோமி அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இதேபோல், இந்த Xiaomi 85 இன்ச் டிவி 4K தெளிவுத்திறன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். இந்த பிரமிக்க வைக்கும் Xiaomi TV குறிப்பாக Master Picture Quality Engine மூலம் ஆதரிக்கப்படுகிறது.
மாஸ்டர் பிக்சர் தர எஞ்சின், வண்ணங்களை மேம்படுத்துதல், மாறுபாடு, தெளிவு மற்றும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. சுருக்கமாக இது ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குகிறது.
இந்த டிவி 95% DCI-P3 கலர் கேமட், ஹை கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வருகிறது. இந்த பிரமிக்க வைக்கும் டிவி லோ ப்ளூ லைட் தொழில்நுட்பம் மற்றும் ஃப்ளிக்கர் குறைப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இந்த சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் சக்திவாய்ந்த குவாட் கோர் ஏ73 செயலியின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த செயலி மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. மேலும், இந்த டிவி HyperOS இல் இயங்குகிறது. எனவே இந்த 85 இன்ச் டிவியில் பல்வேறு புதிய வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவி கேமிங் வசதிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Xiaomi TV S85 Mini LED மாடலும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். இந்த டிவி மாறி புதுப்பிப்பு விகிதம் (VRR), ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
இது டால்பி விஷன் பனோரமிக் ஒலி ஆதரவுடன் நான்கு யூனிட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட் டிவி Wi-Fi 6, HDMI போர்ட், USB போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வருகிறது.
குறிப்பாக சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவி விரைவில் இந்தியா மற்றும் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த Xiaomi TVயின் விலை 7999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 92,163) ஆகும்.
இதேபோல், Xiaomi நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல்வேறு அற்புதமான டிவிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
COMMENTS