POCO நிறுவனம் தனது போகோ C65 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, பட்ஜெட் விலையில் தனித்துவமான வடி...
POCO நிறுவனம் தனது போகோ C65 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, பட்ஜெட் விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் Poco C65 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய Poco ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த Poco C65 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
POCO C65 5G விவரக்குறிப்புகள்:
POCO C65 5G ஃபோன் 6.74-இன்ச் முழு HD மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். பின்னர், இந்த அற்புதமான போகோ ஸ்மார்ட்போனில் 1,600 x 720 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 600 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் மற்றும் பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே சிறந்த திரை அனுபவத்தை வழங்குகிறது.
Poco C65 5G ஸ்மார்ட்போனில் நிலையான MediaTek Helio G85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் கேமிங்கிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். இந்த Poko போன் MIUI 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. Poco C65 5G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் வெளியிடப்படும். இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
போக்கோ C65 5G ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பின்னர், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP கேமராவுடன் போன் அறிமுகமாகும். இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
எனவே இந்த போகோ ஸ்மார்ட்போனின் உதவியுடன் அற்புதமான புகைப்படங்களை எடுக்கலாம். அதேபோல், இந்த Poco C65 5G ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவுடன் அறிமுகமாகும். இந்த போக்கோ போன் கருப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poco C65 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் 18 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
போக்கோ C65 5G ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC, 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. அதேபோல், போக்கோ C65 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,000க்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான விலை இன்றும் தெரியவில்லை எந்த ஒரு லீக் தகவலும் இல்லை நமக்கு கிடைத்த தகவல்படி உண்ப ரூ. 9,999 ரூபாய்க்கு அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
COMMENTS