ஐடெல் இந்தியாவில் சில அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, மலிவு விலையில் போன்களை அறிமுகம் செய்வதில் நிறுவனம் ஆர்வ...
ஐடெல் இந்தியாவில் சில அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, மலிவு விலையில் போன்களை அறிமுகம் செய்வதில் நிறுவனம் ஆர்வமாக உள்ளது. இதேபோல், ஐடெல் சமீபத்தில் ஐடெல் பி55 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக இந்த ஐடல் பி55 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றது. காரணம், இது 5G ஆதரவு, 50MP கேமரா மற்றும் தரமான சிப்செட் போன்றவற்றுடன் கம்மி விலையில் வருகிறது. இந்த ஐடல் பி55 போனுக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து ஐடல் நிறுவனம் ஐடல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
Itel p55 plus specifications
இந்நிலையில், கூகுள் பிளே கன்சோலில் Itel P55 Plus (ஐடெல் p55 plus) போனின் சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஐடல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனில் மாடல் எண் பி663எல் உள்ளது. மேலும் இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வரும்.
ஐடெல்P55 Plus ஸ்மார்ட்போன் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது. Itel P55 Plus ஸ்மார்ட்போனில் Mali G52 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. அதேபோல், Itel P55 Plus ஃபோன் Spreadtrum T606 SoC சிப்செட்டுடன் அறிமுகமாகும்.
குறிப்பாக 50எம்பி ரியர் கேமரா, எச்டி+ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Itel P55 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Itel p55 plus 5G ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 6nm செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது Mali-G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டுடன் வருகிறது. இந்த ஃபோனுக்காக குறிப்பாக வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
இந்த போன் Android 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். Itel p55 plus 5G போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு உள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் இது ஆதரிக்கிறது.
Itel p55 5G ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + AI லென்ஸுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வெளிவந்துள்ளது.
Itel p55 5G ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதேபோல், Itel p55 plus 5G ஸ்மார்ட்போனை பச்சை மற்றும் நீல வண்ணங்களில் வாங்கலாம். பிரமிக்க வைக்கும் Itel p55 plus 5G ஃபோனில் 5G, Dual 4G VoltE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.1, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன. இந்த itel P55 5G போன் அமேசானில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
COMMENTS