Nokia C12 Pro 4ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு Nokia இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல அற்புதமான 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட...
Nokia C12 Pro 4ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு
Nokia இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல அற்புதமான 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல கேமரா பகுதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது நோக்கியா. எனவே வரும் மாதங்களில் 200எம்பி கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக Nokia பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. அதனால் தான் இந்த நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அமேசானில் பிரபல நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
Nokia C12 Pro விலை
அதாவது அமேசானில் Nokia C12 Pro ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் கொண்ட இந்த Nokia C12 Pro ஸ்மார்ட்போனின் விலை முன்பு ரூ.9,199 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த போனில் 21% சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த Nokia C12 Pro ஸ்மார்ட்போனை ரூ.7,299 விலையில் வாங்கலாம். இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.1750 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
அதாவது இந்த நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. பின்னர் இந்த நோக்கியா போன் 720×1600 பிக்சல்கள், 20:9 விகிதத்தில் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேயுடன் வெளிவந்துள்ளதால், பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது.
Nokia C12 Pro சிப்செட்
நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்டா-கோர் யூனிசாக் SC9863A1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. மேலும், இந்த நோக்கியா C12 Pro போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளம் உள்ளது.
மேலும், இந்த நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி சேமிப்பு உள்ளது. மேலும், இந்த நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போன் மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ SD card ஸ்லாட் ஆதரவு உள்ளது.
Nokia C12 Pro கேமரா
Nokia C12 Pro ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் 8எம்பி பின்புற கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த நோக்கியா ஃபோன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமராவுடன் வருகிறது. ஆனால் நோக்கியா நிறுவனம் இந்த போனில் கேமரா வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 8எம்பி பின்பக்க கேமராவிற்கு பதிலாக 13எம்பி கேமராவுடன் போன் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Nokia C12 Pro பேட்டரி
இந்த புதிய நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போன் மாடலில் 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது இந்த Nokia போன் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் இரண்டு வருட பாதுகாப்பு அப்டேட்களை பெறும் என கூறப்படுகிறது.
நோக்கியா C12 Pro ஸ்மார்ட்போனில் 4ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவு உள்ளது. டார்க் சியான், சர்க்கிள் மற்றும் லைட் மிண்ட் வண்ணங்களில் இந்த நோக்கியா C12 Pro போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
COMMENTS