Vivo T3 Ultra 5G செப்டம்பர் 12 அன்று இந்தியாவில் வெளியீட்டு.. லீக்கான விலை எவ்வளவு தெரியுமா ஆச்சரியப்படுவீங்க.?,விவோ டி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்
Vivo-வின் புதிய (Vivo T3 Ultra 5G) போனை இந்தியாவில் வெளியிடப்படும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய விவோ போன் செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவருவதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது Vivo T3 Ultra 5G போன் விலை மற்றும் அம்சங்களை ஆன்லைனில் பார்க்கவும்.
Vivo T3 Ultra 5G Specifications
விவோ டி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்: Vivo T3 அல்ட்ரா 5G ஃபோன் 6.67 இன்ச் 1.5K 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். ஃபோனின் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், 4,500 nits உச்ச பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த Vivo T3 Ultra 5G ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 9200 Plus SoC (MediaTek Dimensity 9200+ SoC) சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். மேலும் இந்த விவோ போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளிவரும்.
இந்த போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது. Vivo T3 Ultra 5G ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் மெமரி நீட்டிப்பு விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Vivo T3 Ultra 5G ஃபோனில் 50MP சோனி IMX921 முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
மேலும், விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஐபி68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வெளியிடப்படும். இந்த Vivo போன் Dolby Audio ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவோ டி3 அல்ட்ரா 5ஜி மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது.
இந்த புதிய Vivo T3 Ultra 5G ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இது பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை (ஃபாஸ்ட் சார்ஜ்) செய்ய முடியும்.
மேலும், Vivo T3 Ultra 5G போன் Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வெளியிடப்படும். பின்னர் இந்த புதிய விவோ போன் பிரத்யேகமான ஃப்ரோஸ்ட் கிரீன் மற்றும் லூனா கிரே வண்ணங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த Vivo T3 Ultra 5G போன் ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
COMMENTS