இந்த மாச கடைசில Samsung Galaxy A16 5G போன் அறிமுகமா?,Samsung Galaxy A16 5G Specifications,சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள்
இந்த மாச கடைசில Samsung Galaxy A16 5G போன் அறிமுகமா? |
Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போனை இந்த இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் வசதியுடன் இந்த புதிய போன் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த சாம்சங் போனின் அம்சங்களையும் பாருங்கள்.
Samsung Galaxy A16 5G Specifications
சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள்: இந்த Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் Full HD Plus Super AMOLED Infinity-u டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். மேலும் இதன் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 800 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த மாச கடைசில Samsung Galaxy A16 5G போன் அறிமுகமா? |
இந்த புதிய Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போன் நிலையான Exynos 1330 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இந்த போன் ஆறு வருடங்கள் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது.
Samsung Galaxy A16 5G, ஸ்மார்ட்போன் (4GB RAM + 128GB மெமரி) மற்றும் 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என நான்கு வகைகளில் கிடைக்கும். கூடுதல் மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவும் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டு பயன்படுத்த ( microSD Card )மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போனில் 50MP மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16எம்பி கேமராவும் உள்ளது. இது தவிர, ஸ்மார்ட் போனில் (LED flash) எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த மாச கடைசில Samsung Galaxy A16 5G போன் அறிமுகமா? |
இந்த புதிய Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த புதிய போன் IP54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு மதிப்பீட்டில் அறிமுகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy A16 5G ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.2, NFC, USB Type-C port, GPS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக, இந்த புதிய போன் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரூ.20,000க்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனவே Samsung Galaxy A16 5G போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும்.
photo credit: techspecs.info
COMMENTS