விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் iQOO Z9 Turbo Plus: என்னென்ன அம்சங்கள்?,ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் அம்சங்கள்,iQOO Z9 Turbo Plus Specifications
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் iQOO Z9 Turbo Plus: என்னென்ன அம்சங்கள்? |
iQOO Z9 Turbo Plus Specifications
ஐக்யூ இசட்9 டர்போ பிளஸ் அம்சங்கள்: இந்த iQOO போன் 1.5K தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 480Hz தொடு மாதிரி வீதத்துடன் வருகிறது. மேலும், 4500 nits உச்ச பிரகாசம் மற்றும் 3840Hz PWM டிம்மிங் நிரம்பியுள்ளது.
இதுவரை DC Dimming, HDR10+ மற்றும் Dolby Vision ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன. எனவே வீடியோ மற்றும் கேமிங் வெளியீடு மிகவும் பிரீமியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது Origin OS 4 மற்றும் Android 14 OS உடன் வருகிறது. Immortalis-G720 GPU கிராபிக்ஸ் அட்டையுடன் வருகிறது.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் iQOO Z9 Turbo Plus: என்னென்ன அம்சங்கள்? |
சிப்செட் கேமிங் செயல்திறனுடன் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300+ 4nm SoC கொண்டுள்ளது. இந்த iQOO டர்போ மாடல் 4 வகைகளில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வகைகள் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன.
அதேபோல், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி மெமரி கொண்ட உயர்தர மாடல்களும் ஆர்டர் செய்யக் கிடைக்கின்றன. எனவே கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ரேம் மற்றும் சிப்செட் லேக்-ஃப்ரீ அவுட்புட்டை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த iQOO Z9 Turbo Plus போனில் கேமரா அம்சங்களில் ஆக்ஷன் இண்டிகேட்டர் உள்ளது.
50 எம்.பி பிரதான கேமராவானது சோனி LYT-600 சென்சார் உடன் வருகிறது, இது இடைப்பட்ட தொலைபேசிகளில் பொதுவானது. இது GlaxyCore GC08A3 சென்சார் கொண்ட 8 MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் வருகிறது. இரட்டை கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் வருகிறது.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் iQOO Z9 Turbo Plus: என்னென்ன அம்சங்கள்? |
iQOO Z9 Turbo Plus ஃபோன் 16 MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர, அகச்சிவப்பு சென்சார் நிரம்பியுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ போர்ட்டுடன் வருகிறது. இது 7.98 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது.
இந்த அல்ட்ரா ஸ்லிம் பாடியில் 6400mAh பேட்டரி அமைப்பும் நிரம்பியுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. எடையைப் பார்த்தால் 196 கிராம் வரும். IP65 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு வருகிறது. இது மூன் ஷேடோ டைட்டானியம், ஸ்டார்லைட் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.
12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.27,370, 12ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.30,940 மற்றும் 16ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ. 34,510. தற்போது சீனாவில் வெளியாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் வரவுள்ளது.
COMMENTS