iPhone 16 அறிமுகத்தை முன்னிட்டு Amazon, Flipkart, iPhone 15, iPhone 14 மீது திடீர் விலை குறைப்பு..!
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 ஆகிய இரண்டும் இப்போது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் மிகக் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கின்றன. முதலில் ரூ.79,600க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது ரூ.69,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.9,601 பிளாட் தள்ளுபடி பெறப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் பழைய மற்றும் இன்னும் மலிவான ஐபோனைத் தேடுகிறீர்களானால், iPhone 14 ஐக் கவனியுங்கள். இதன் அசல் வெளியீட்டு விலையான ரூ. 69,600க்குப் பதிலாக ரூ. 57,999க்கு வாங்கலாம். அதாவது ரூ.11,601 பிளாட் தள்ளுபடி கிடைத்துள்ளது. ஐபோன் 15 மாடலைப் போலவே, ஐபோன் 14 ஆனது கூடுதல் வங்கி நன்மைகளுக்கான அணுகலுடன் வருகிறது.
இன்றிரவு ஆப்பிளின் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வைப் பார்ப்பது எப்படி?இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடைபெறும். சரியாக இரவு 10.30 மணிக்கு இந்திய நேரலையில் தொடங்கும். ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் ஆகிய 3 தளங்கள் வழியாக நேரடி ஸ்ட்ரீமிங்கிற்கு இது கிடைக்கும்.
ஐபோன் 16 சீரியஸ் கீழ் உள்ள 4 மாடல்களின் விலை என்னவாக இருக்கும்?ஆப்பிள் அப் வழியாக சமீபத்திய தகவலின்படி, ஐபோன் 16 மாடலின் விலை $799 (தோராயமாக ரூ. 67,100), ஐபோன் 16 பிளஸ் மாடல் $899 விலையில் இருக்கும். (தோராயமாக ரூ. 75,500), மற்றும் iPhone 16 Pro மாடல் $1,099 (தோராயமாக ரூ. 92,300) விலையில் இருக்கும். ப்ரோ மேக்ஸ் மாடல் $1,199 (சுமார் ரூ. 1,00,700) விலையிலும் வெளியிடப்படலாம்.
இந்திய விலையானது மேற்கண்ட விலைகளை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தியாவிற்கு வரும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் இறக்குமதி வரி மற்றும் கூடுதல் செலவுகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், இந்திய சந்தைக்கான விலைகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் தொடரின் விலைகளுடன் "பெரும்பாலும்" பொருந்தக்கூடும்!
COMMENTS