ரூ.8,499-க்கு இப்படி ஒரு TECNO போன்-ஆ!.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?,டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள்,TECNO POP 9 5G Specifications
ரூ.8,499-க்கு இப்படி ஒரு TECNO போன்-ஆ!.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்? |
TECNO POP 9 5G Specifications
டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள்: ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டது. மேலும் இதன் டிஸ்ப்ளே 1612 x 720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. ஃபோன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த சிறந்ததாக உள்ளது.
இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உடன் வருகிறது. HiOS 14ஐ அடிப்படையாகக் கொண்ட Android 14 இயங்குதளத்துடன் இந்த ஃபோன் வருகிறது. இருப்பினும், இந்த ஃபோனுக்கான Android புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்கின்றன.
இந்த போனில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே நீங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறுவீர்கள். ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. போனில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.
ரூ.8,499-க்கு இப்படி ஒரு TECNO போன்-ஆ!.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்? |
Tecno Pop 9 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் AI இரண்டாம் நிலை லென்ஸ் ஆதரவுடன் 48MP சோனி IMX582 முதன்மை கேமரா உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அற்புதமான படங்களை எடுக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8MP கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, போனியில் LED ப்ளாஷ் மற்றும் பல சிறந்த கேமரா அம்சங்கள் உள்ளன.
மேலும், டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. இதன் பொருள் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த (microSD card slot) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது.
இந்த டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது. மேலும் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் 500எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.8,499-க்கு இப்படி ஒரு TECNO போன்-ஆ!.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்? |
5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், NFC, USB USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது மற்றும் 189 கிராம் எடை கொண்டது.
64ஜிபி டெக்னோ பாப் 9 5ஜி போனின் விலை ரூ.9,499. இதன் 128ஜிபி மெமரி வேரியன்டின் விலை ரூ.9,999. மிட்நைட் ஷேடோ, அஸூர் ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. அக்டோபர் 7 ஆம் தேதி அமேசானில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த போனை ரூ.8,499 விலையில் வாங்கலாம்.
COMMENTS