Amazon Prime Day Sale: அடிச்சு தூள் கிளப்பிய விற்பனை எந்த மாடல்?
Amazon Prime Day 2024 என்ற சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் நடந்து வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இந்த சிறப்பு விற்பனையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M15 5G (Samsung Galaxy M15 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, Samsung Galaxy M15 5G போன் அமேசானில் 19 சதவீத தள்ளுபடியில் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை இப்போது ரூ.11,999 விலையில் வாங்கலாம்.
Samsung Galaxy M15 5G Specifications
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள்: இந்த ஃபோன் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம், 90Hz புதுப்பிப்பு வீதம், 800 nits பீக் பிரைட்னஸ், 19.5:9 விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ 6nm சிப்செட் உடன் வருகிறது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இது Arm Mali G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது.
Samsung Galaxy M15 5G ஃபோனில் 50 MP முதன்மை கேமரா + 5 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் + 2 MP மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த பின்புற கேமராக்கள் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு, 10x டிஜிட்டல் ஜூம், முழு HD (FHD) வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13MP கேமரா உள்ளது. இது தவிர, பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு உள்ளது. பின்னர், இந்த சாம்சங் 5ஜி போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
இதேபோல், Samsung Galaxy M15 5G மாடலில் 4GB RAM மற்றும் 128GB நினைவகம் உள்ளது. கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது.
Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
குறிப்பாக 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11, Bluetooth 5.3, 3.5 mm Audio Jack, USB வகை USB Type-C Port உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
COMMENTS