வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் 2.5D curved டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?,லாவா யுவா 5ஜி அம்சங்கள்,Lava Yuva 5G Specifications
இந்திய நிறுவனமான லாவாலாவா இந்தியாவில் புதிய Lava Yuva 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் குறைந்த விலையில் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Lava Yuva 5G Specifications
லாவா யுவா 5ஜி அம்சங்கள்: இந்த லாவா போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் 2.5டி வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 1600 × 720 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஃபோன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும்.
புதிய Lava Yua 5G ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Octa-Core Unisoc T750 6nm சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. மேலும், இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (ஆண்ட்ராய்டு 13) இயங்குதளம் உள்ளது ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது இது microSD கார்டு ஸ்லாட்டை ஆதரிக்கிறது, எனவே நீங்கள் 1TB வரை மெமரி கார்டைப் பயன்படுத்தலாம்.
இந்த Lava Yua 5G ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியூ கிராபிக்ஸ் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.
வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் 2.5D curved டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
Lava Yua 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் Lava Yua 5G போனின் எடை 208 கிராம். இந்த போனில் FM ரேடியோ ஆதரவும் உள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட லாவா யுவா 5ஜி போனின் விலை ரூ.9,499. அதன்பின் அதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை ரூ.9999. ஜூன் 5ம் தேதி அமேசான், லாவா இ-ஸ்டோர் போன்ற தளங்களில் இந்த போன் வாங்கலாம். சீன செல்போன் நிறுவனங்களுக்கு போட்டியாக லாவா நிறுவனம் மலிவு விலையில் இந்த 5ஜி போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
COMMENTS