Infinix GT 20 Pro இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?,Infinix GT 20 Pro specifications,Infinix GTBook specifications
Infinix GTBook லேப்டாப் அம்சங்கள் (Infinix GTBook விவரக்குறிப்புகள்): RGB லைட்டிங், RGB கீபோர்டு, Cyber Mecha வடிவமைப்பு, கூலிங் ஃபேன், RGB மேட், RGB மவுஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் Infinix GTBook லேப்டாப் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடலில் லூப்-லெட் இன்டர்ஃபேஸ் மற்றும் கேம் லைட்டிங் எஃபெக்ட்ஸ் உள்ளன.
Infinix GT 20 Pro விவரக்குறிப்புகள்: Infinix GT 20 Pro ஃபோன் 6.78-inch Full HD Plus AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இதன் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், 2304 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங், பிக்சல்வொர்க்ஸ் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்ப்ளே சிப் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். புதிய Infinix GT 20 Pro ஆனது HiOS 14 அடிப்படையிலான Android 14ஐயும் இயக்குகிறது. இருப்பினும், இந்த ஃபோன் Android புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். குறிப்பாக இந்த வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
Infinix GT 20 Pro ஃபோன் 108MP சாம்சங் HM6 சென்சார் + 2MP மேக்ரோ லென்ஸ் + 2MP டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புகளுடன் வரும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமராவும் உள்ளது. இது தவிர, இந்த போன் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
Infinix GT 20 Pro ஸ்மார்ட்போன் நிலையான மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5G 4nm செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேமிங் பயனர்களுக்கான மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.
Infinix GT 20 Pro இரண்டு வகைகளில் கிடைக்கும் - 8GB RAM + 256GB நினைவகம் மற்றும் 12GB RAM + 256GB நினைவகம். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும், Infinix GT 20 Pro போன் இந்தியாவில் LED-பேக் பேக் பேனல், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, IR பிளாஸ்டர், USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள், JBL சவுண்ட் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வெளியிடப்படும்.
இதில் 5000mAh பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. குறிப்பாக போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம். தொலைபேசியில் 5G, Wi-Fi 6, புளூடூத் 5.3, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. Infinix GT 20 Pro ஃபோன் Mecha Blue, Mecha Orange மற்றும் Mecha Silver வண்ணங்களில் வெளியிடப்படும்.
இன்ஃபினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ரூ. 23,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் Infinix GTBook லேப்டாப் சற்று அதிக விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த இரண்டு சாதனங்களும் Flipkart தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
COMMENTS