உங்ககிட்ட ரூ.20,000 இருந்தால் இந்த மூன்று போனில் ஏதாவது ஒன்றை வாங்கலாம். ,Realme 12 Plus Specifications Price
ரூ.20,000 பட்ஜெட்டில் அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்காக டாப் 3 பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி சென்சார், OIS தொழில்நுட்பம் போன்ற அம்சங்களும் இந்த பிரிவில் வருகின்றன. எந்த போன் இருக்கு? விலை எப்படி இருக்கும்? முழு விவரம் இதோ.
Realme 12 Plus Specifications Price
ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள், விலை: இது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் 50 MP பிரதான கேமரா + 8 MP அல்ட்ரா வைட் கேமரா + 2 MP மேக்ரோ கேமராவுடன் Sony LYD-600 சென்சார் உடன் வருகிறது. OIS ஆதரவு மற்றும் 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
இந்த பட்ஜெட் பிரிவில் கிடைக்காத (Sony LYD-600 சென்சாருடன்) வருவதால், கேமரா பிரியர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மற்ற அம்சங்களைப் பார்க்கும்போது, இது 6.7 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2000 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது.
ஆக்டா கோர் MediaTek Dimensity 7050 6nm சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உள்ளது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் (67W Fast Charging) மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.19,999 மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடல் ரூ.21,999.
iQOO Z9 Specifications Price
ஐக்யூ இசட்9 அம்சங்கள், விலை: இந்த iQOO ஃபோன் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் 50 MP பிரதான கேமரா + 2 MP டெப்த் கேமராவுடன் Sony IMX882 சென்சார் உடன் வருகிறது. OIS + EIS ஆதரவு உள்ளது. 16 MP செல்ஃபி ஷூட்டர் 1080p வீடியோ பதிவுடன் வருகிறது.
இந்த சென்சார் நல்ல கேமரா வெளியீட்டையும் தருகிறது. இந்த போன் ஆக்டா கோர் (MediaTek Dimensity 7200 4nm chip) மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது. இதில் 6.67 இன்ச் FullHD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. DD-Star2 வகுப்பு பாதுகாப்பு உள்ளது.
இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.19,999 மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடல் ரூ.21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2000 உடனடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.20,000 இருந்தால் இந்த மூன்று போனில் ஏதாவது ஒன்றை வாங்கலாம்.
Redmi Note 13 5G Specifications Price
ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள், விலை: ஃபோன் 108 MP பிரதான கேமராவுடன் 3X இன்-சென்சார் ஜூமிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு ப்ரோ-கிரேடு கேமரா மாடல். இது 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் வருகிறது.
எனவே, இந்த போன் பட்ஜெட் கேமரா பிரியர்களின் டாப் லிஸ்டில் உள்ளது. இது 6.67 இன்ச் FullHD+ Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதம், 1000 nits உச்ச பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கிடைக்கிறது.
இது ஆக்டா கோர் MediaTek Dimensity 6080 6nm சிப்செட் உடன் வருகிறது. இந்த போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ. 17,999, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 19,999 மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 21,999. 1000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
COMMENTS