Xiaomi 14 Ultra ஃபிளாக்ஷிப் போன் பிப்ரவரி.28-ம் தேதி வெளியீட்டு முழு விவரம்.,tech news Tamil, TECH NEWS TAMIL
இந்நிலையில், Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போனின் வண்ணங்கள் மற்றும் அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த போன் டைட்டானியம் ஒயிட் மற்றும் ப்ளூ நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெள்ளை நிற Xiaomi 14 Ultra மாடலில் லெதர் பேக் இருக்கும் என கூறப்படுகிறது.
Xiaomi 14 Ultraவின் டாப்-எண்ட் மாடல் ரூ.84,000 விலையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியிடப்பட்ட Xiaomi 14 அல்ட்ரா ஃபோனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Xiaomi 14 Ultra specifications
Xiaomi 14 Ultra விவரக்குறிப்புகள்: இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என 3 வகைகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமரா + அல்ட்ரா-வைட் லென்ஸ் + டெலிஃபோட்டோ லென்ஸ் + டெப்த் சென்சார் ஆகியவற்றின் லைக்கா குவாட் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது.
சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஐபி68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பின்னர், இந்த அசத்தலான Xiaomi 14 Ultra போன் Wi-Fi, GPS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் Xiaomi இந்த போனின் பேட்டரி திறனில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போன் 5180 mAh பேட்டரியுடன் வரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்) மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்) ஆகியவையும் உள்ளன. மேலும் இந்த போன் சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போன் சற்று அதிக விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் விலைக்கு ஏற்ற அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS