அறிமுகமாக இருக்கும் Samsung Galaxy A35 விலை, விவரக்குறிப்புகள்.,ரூ.20,000க்குள் அறிமுகம் செய்யப்படும்
சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy A35 5G ஸ்மார்ட்போன் Google Play Console இல் காணப்பட்டது. அதாவது இந்த போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் அந்த தளத்தில் வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த Samsung Galaxy A35 5G ஃபோனில் மூன்று பின்புற கேமரா மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளது. ஃபோன் மெலிதான பெசல்களுடன் ஒரு பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் வசதியாக உள்ளது.
Samsung Galaxy A35 Specifications
Samsung Galaxy A35 5G அம்சங்கள்: இந்த Samsung Galaxy A35 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு HD பிளஸ் sAMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது.
Galaxy A35 5G ஸ்மார்ட்போன் (Exynos 1380) எக்ஸ்நோஸ் 1380 சிப்செட்டுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A35 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கும் - 6GB RAM + 128GB நினைவகம் மற்றும் 8GB RAM + 256GB நினைவகம். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா ஆகிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான போட்டோ (புகைப்படங்கள்) மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13எம்பி கேமராவும் உள்ளது.
இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் பாட்டம் ஃபைரிங் ஸ்பீக்கர்கள், Side-mounted Fingerprint Scanner ( சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் )போன்ற அற்புதமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy A35 ஸ்மார்ட்போன் (5,000mAh battery) 5,000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும்.
Samsung Galaxy A35 போன் 5G, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த போன் இந்தியாவில் ரூ.20,000க்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS