ரூ. 10,000-க்கு கீழ் அறிமுகம் அகும் Moto போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புது போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த Moto போனின் மாடலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.
இருந்தபோதிலும் சீ கிரீன் (Sea Green), சாடின் ப்ளூ (Satin Blue), கான்கார்ட் பிளாக் (Concord Black)மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) நிறங்களில் புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோ ஜி04 போன் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்பு தான் மோட்டோ ஜி04 போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த போன் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே விரைவில் இந்த மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Moto G04 specifications
Moto G04, 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த Moto G04 போன் வெளிவரும். மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், ப்ரைட்னஸ் மோட், லைட் மோட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 4GB ரேம் (4GB விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியுடன் Moto G04 போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி கார்டு சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.
எல்இடி பிளாஷ் லைட் ஆதரவு கொண்ட 16எம்பி கேமரா உடன் Moto G04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இது தவிர LED பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை இவற்றுள் அடக்கம்.
ஆல UX சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Moto G04 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஆண்ட்ராய்டு போனுக்கு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின் Side-mounted Fingerprint Scanner வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
Unisoc T606 processor வசதியைக் கொண்டுள்ளது Moto G04 மாடல். இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த moto போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
5000எம்ஏஎச் பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டு வெளிவரும் Moto G04 போன். ஐபி52 ரேட்டிங், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த Moto ஸ்மார்ட்போன். குறிப்பாக Moto G04 போன் இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும்.
COMMENTS