iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு.. 120W சார்ஜிங்.. 64MP கேமரா.. ஐக்யூ 5ஜி போனுக்கு விலை குறைப்பு.
தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் IQOO நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் முன்பு ரூ.31,999 ஆக இருந்தது, ஆனால் தற்போது இதன் விலை ரூ.27,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
iQOO Neo 7 Pro 5G விவரக்குறிப்புகள்
பிரமிக்க வைக்கும் iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் 6.68-இன்ச் FHD+ Samsung E5 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இந்த ஃபோன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1300 நிட்ஸ் பிரகாசம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்புடன் வருகிறது. குறிப்பாக, இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்குகிறது.
அதேபோல், இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட்டுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. இந்த மொபைலுக்கான சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.
இந்த போன் Funtouch OS 13 அடிப்படையிலான Android 13 இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த ஃபோன் Android புதுப்பிப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருளில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் 64MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP கேமராவுடன் வருகிறது. இது தவிர, இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்னர் iQOO Neo 7 5G 5000 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம்.
குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சம் இந்த போனில் உள்ளது. பின்னர், இந்த iQOO Neo7 5G ஸ்மார்ட்போனில் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C port, 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
OnePlus Nord ஸ்மார்ட்போன்களை வாங்குவதை விட தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த iQOO Neo 7 Pro 5G போனை வாங்குவது நல்லது. இதேபோல் IQ நிறுவனம் பல அற்புதமான ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
COMMENTS