சாம்சங் இன்று Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போனுடன் Samsung Galaxy A15 5G ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக இந்த புதி...
சாம்சங் இன்று Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போனுடன் Samsung Galaxy A15 5G ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக இந்த புதிய Galaxy A15 5G போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகளை விரிவாகப் பார்ப்போம்.
Samsung Galaxy A15 5G விவரக்குறிப்புகள்:
சாம்சங் Galaxy A15 5G ஃபோன் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 800 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சாம்சங் Galaxy A15 5G ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிட்டி 6100 (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. மேலும் இந்த ஃபோன் One UI 6 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
குறிப்பாக, இந்த Samsung Galaxy A15 5G ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா + 5MP அல்ட்ரா வைட் கேமரா + 5MP மேக்ரோ கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்கலாம்.
சாம்சங் Galaxy A15 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் Galaxy A15 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது இந்த சாம்சங் போன் 25 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. இந்த Samsung Galaxy A15 5G ஸ்மார்ட்போன் ப்ளூ பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy A15 5G விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Samsung Galaxy A15 5G போனின் விலை ரூ.19,999. 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.22,499. இந்த போனின் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டவுடன் புதுப்பிப்போம்.
COMMENTS