வேற என்ன வேணும்.. 165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. ரெண்டு Nubia ஃபோன்.. எந்த மாடல்? Nubia நிறுவனம் Red Magic 9 Pro ஸ்மார்ட்போனை நவம்பர் 23...
வேற என்ன வேணும்.. 165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. ரெண்டு Nubia ஃபோன்.. எந்த மாடல்?
Nubia நிறுவனம் Red Magic 9 Pro ஸ்மார்ட்போனை நவம்பர் 23ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. மற்ற போன்களுடன் ஒப்பிடும் போது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த Red Magic 9 Pro ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nubia Red Magic 9 Pro Specifications
மேலும் இந்த போன் விரைவில் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட் மேஜிக் 9 ப்ரோ போனின் அம்சங்கள் 3சி சான்றிதழ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
அதாவது இந்த Red Magic 9 Pro ஸ்மார்ட்போன் 6500 mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 165 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். தொலைபேசியில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன, குறிப்பாக வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம்.
Red Magic ஃபோன் Qualcomm Snapdragon 8 Gen 3 SoC மற்றும் Red Core R2 கேமிங் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.
மேலும் Red Magic 9 Pro ஸ்மார்ட்போன் புதிய ICE Magic கூலிங் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங்கிற்கு ஏற்ற வகையில் இந்த அற்புதமான போன் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த Red Magic 9 Pro ஸ்மார்ட்போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.
ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். பின்னர் 2480 × 1116 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களை ஃபோன் கொண்டுள்ளது. அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. இதன் காரணமாக, காட்சியில் பஞ்ச் ஹோல் இல்லை. மேலும், மூலைக்கு மூலை டிஸ்ப்ளே ஒரு மினி லேப்டாப் அல்லது மினி டிவியில் கேம்களை விளையாடும் உணர்வைத் தருகிறது.
ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரதான கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32எம்பி கேமராவுடன் இந்த போன் வரும் என கூறப்படுகிறது.
கேமிங் பிரியர்களுக்காக, இந்த போனில் RGB LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர் இந்த போனில் ஐஆர் பிளாஸ்டர் வசதியும் உள்ளது. மேலும், இந்த Red Magic 9 Pro போன் 8 GB RAM + 128 GB நினைவகம், 12 GB RAM + 256 GB நினைவகம் மற்றும் 16 GB RAM + 512 GB நினைவகம் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது.
குறிப்பாக, இந்த பிரமிக்க வைக்கும் Red Magic 9 Pro ஸ்மார்ட்போனில் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3 மைக்ரோஃபோன்கள் உள்ளன. புதிய போன் டார்க் நைட் நைட், டியூட்டிரியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் மற்றும் டியூட்டிரியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங்ஸ் வண்ணங்களில் வெளியிடப்படும்.
மேலும் இந்த போனில் 5ஜி ஆதரவு உள்ளது. ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS