Vivo இந்தியாவில் Vivo V30 மற்றும் Vivo V30 Lite ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன்கள் வரும் வாரங்களி...
Vivo இந்தியாவில் Vivo V30 மற்றும் Vivo V30 Lite ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன்கள் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் Vivo V30 Lite ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளியிடப்படும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
ரூ.12,800-மிரட்ட வரும் Vivo V30 Lite போன்.
அதேபோல், இந்த Vivo V30 Lite ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி + 256ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
Vivo V30 Lite போன் 4700 mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் அதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. மேலும் இந்த அற்புதமான விவோ போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. விவோ வி30 லைட் போன் USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரவுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. Vivo V30 Lite போனின் அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியிடப்படும்.
நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்திய Vivo Y27s போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம். Vivo Y27S ஸ்மார்ட்போன் 6.64 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 2,388 x 1,080 பிக்சல்கள், 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
Vivo Y27S ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த octa-core Qualcomm Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த Vivo Y27S ஸ்மார்ட்போனில் FuntouchOS 13 அடிப்படையிலான Android 13 (Android 13) பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, Vivo Y27S ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் விற்பனை செய்யப்படும். நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த இந்த ஃபோன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை ஆதரிக்கிறது. Vivo Y27S போன் 5000 mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. . பின்னர் இந்த போனில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்), கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைபேசியில் 50MP முதன்மை கேமரா + 2MP ஆழம் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
Vivo Y27S ஸ்மார்ட்போன் 4ஜி நானோ சிம்கள், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வருகிறது. மேலும் Vivo Y27S இன் விலை IDR 2,399,000 (இந்திய மதிப்பில் ரூ. 12,800).
COMMENTS