ஒப்போ நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ A2 Pro ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இந்தியா உட்ப...
ஒப்போ நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ A2 Pro ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.
பட்ஜெட் விலையில் புதிய OPPO A2 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்
அதாவது ஒப்போ ஏ2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 950 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது.
இந்த Oppo A2 Pro ஸ்மார்ட்போனில் Dimenity 7050 6nm ப்ராசஸர் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். மேலும், இந்த டிவியில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் ColorOS 13.1 (ColorOS 13.1) அடிப்படையிலான Android 13 (Android 13) உடன் வெளிவந்துள்ளது.
இந்த Oppo A2 Pro ஸ்மார்ட்போனில் 64MP பிரைமரி கேமரா + 2MP டெப்த் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எல்இடி ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இது தவிர புத்தம் புதிய ஒப்போ A2 Pro ஸ்மார்ட்போனில் LED ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என மூன்று வகைகளில் விற்பனை செய்யப்படும்.
மேலும், இந்த ஒப்போ A2 Pro ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். Oppo A2 Pro போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமிக்க வைக்கும் Oppo ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 சான்றிதழுடன் வருகிறது. இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம்.
குறிப்பாக, இந்த Oppo A2 Pro ஸ்மார்ட்போனில் 5G, Dual 4G VoltE, Wi-Fi 6 802AX, ப்ளூடூத் 5.2, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன. இந்த புதிய Oppo A2 Pro ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக OnePlus போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
Oppo A2 Pro ஸ்மார்ட்போன் கருப்பு, டெசர்ட் பிரவுன் மற்றும் ட்விலைட் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை 1799 யுவான் (இந்தியாவில் விலை ரூ. 20,820). குறிப்பாக இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS