மோட்டோ ஜி54 5ஜி மற்றும் மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது....
மோட்டோ ஜி54 5ஜி மற்றும் மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய தகவலின்படி, இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும்.
மேலும் இந்த மோட்டோ எட்ஜ் 40 நியோ 5ஜி போனின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த Moto Edge 40 Neo 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போன் வெளிர் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
மீண்டும் மீண்டுமா..! விரைவில் அறிமுகமாகும் Moto Edge 40 Neo…!
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி பிளஸ் பி-ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். மோட்டோ எட்ஜ் 40 நியோ போனின் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1300 நிட்ஸ் பிரகாசம், 360 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 1050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. பின்னர் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான அதிர்ச்சியூட்டும் மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். மேலும் எட்ஜ் 40 நியோ போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. மோட்டோ எட்ஜ் 40 நியோ நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Moto Edge 40 Neo ஆனது 50MP பிரைமரி கேமரா + 13MP அல்ட்ரா-வைட் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பிரமிக்க வைக்கும் மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32எம்பி கேமராவும் உள்ளது.
இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் ஐபி68 ரேட்டிங், டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. மோட்டோ எட்ஜ் 40 நியோ போன் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வரும்.
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 6W வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS