மோட்டோரோலா நிறுவனம் புதிய Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனை செப்டம்பர் 21ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் வ...
மோட்டோரோலா நிறுவனம் புதிய Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனை செப்டம்பர் 21ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் விலை குறித்த தகவல் வெளியாகும் முன்பே வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
மோட்டோரோலா நிறுவனம் Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனை ரூ.24,999 விலையில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா போன் ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக வெளிவருகிறது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஏற்கனவே இணையதளத்தில் கசிந்துள்ளன. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
Moto Edge 40 Neo – Full phone specifications
Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7030 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. பின்னர் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான அதிர்ச்சியூட்டும் மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும்.
மோட்டோ எட்ஜ் 40 நியோ6.55-இன்ச் முழு எச்டி+ போல்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இந்த போன் 2400×1080 பிக்சல்கள், 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1300 நிட்ஸ் பிரகாசம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் பல்வேறு காட்சி அம்சங்களுடன் அறிமுகமாகும்.
புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. மோட்டோ எட்ஜ் 40 நியோ நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
மோட்டோ எட்ஜ் 40 நியோ 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32எம்பி கேமராவும் உள்ளது.
Moto Edge 40 Neo Price in India?
இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த Moto Edge 40 Neo ஸ்மார்ட்போன் ஐபி68 ரேட்டிங், டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Moto Edge 40 Neo ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இந்த போன் 68W வேகமாக சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
மோட்டோ எட்ஜ் 40 நியோபோன் 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வருகிறது. Motorola Edge 40 Neo Soothing Sea மற்றும் Caneel Bay வண்ணங்களில் வெளியிடப்படும். குறிப்பாக OnePlus Nord போன்களை விட இந்த Motorola Edge 40 Neo வாங்கலாம்..
COMMENTS