Vivo தனது புதிய Vivo V29e ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.குறிப்பாக, இந்த புதிய Vivo V29E ஸ்மார்ட்போன் One...
Vivo தனது புதிய Vivo V29e ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.குறிப்பாக, இந்த புதிய Vivo V29E ஸ்மார்ட்போன் OnePlus போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்ப்ளே, 64எம்பி கேமரா என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும், Vivo V29E இன் விலை மற்றும் சேமிப்பக விவரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
விலை
ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாறுபாட்டின் விலை ரூ.26,999. அதேபோல், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.28,999. குறிப்பாக இந்த புதிய Vivo போனை சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வாங்கலாம்
Vivo V29e 5G Specifications
Vivo V29e 5G விவரக்குறிப்புகள்: Vivo V29 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED Full HD Plus 3D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், 1300 nits பிரைட்னஸ், 240Hz டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.
Vivo V29e 5G ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 6nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். மேலும் கேமிங் தேவைகளுக்கு ஏற்ப இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
Vivo V29e 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. ஆனால் இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விவோ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் ஃபோன் ஆதரிக்கிறது.
இந்த Vivo V29E 5G போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
Vivo V29e ஃபோனில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 64MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமராவும் இந்த போனில் வருகிறது. இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
Vivo V29E 5G போன் 5G, 4G VoltE, 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரவுள்ளது. இந்த Vivo V29E 5G ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS