Infinix Zero 30 5G, 12GB ரேம், 108MP கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்? Infinix நிறுவனம் அதன் Infinix GT 10 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில...
Infinix Zero 30 5G, 12GB ரேம், 108MP கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
Infinix நிறுவனம் அதன் Infinix GT 10 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Infinix GT 10 Pro 5G போன் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று Infinix அறிவித்துள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
மேலும், Infinix GT 10 Pro 5G போனை பிளிப்கார்ட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியிடப்படுவதால், இது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
Infinix Zero 30 5G specifications
இந்த ஃபோன் 6.78-இன்ச் வளைந்த 10-பிட் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இந்த போனின் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் (144Hz refresh rate), 950 நிட்ஸ் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Infinix Zero 30 ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் + 2MP டெப்த் லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புகளுடன் வரும். குறிப்பாக இந்த போன் மூலம் வெளிச்சம் குறைந்த இடங்களிலும் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த போனின் கேமரா அம்சத்தில் Infinix சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Infinix Zero 30 ஸ்மார்ட்போன் குறிப்பாக செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 50MP கேமராவுடன் அறிமுகமாகும். இது தவிர, இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. சுருக்கமாக, இந்த Infinix GT 10 Pro 5G போன் OnePlus போன்களை விட சிறந்த கேமரா வசதிகளுடன் வெளிவருகிறது.
Infinix Zero 30 ஸ்மார்ட்போனில் Octa Core MediaTek Dimensity 8020 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வீடியோ எடிட்டிங், கேமிங் போன்றவற்றிற்கு சிறந்ததாக உள்ளது.மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
Infinix Zero 30 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது 45 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போனின் பின் பேனலில் பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் ஃபினிஷ் உள்ளது. Infinix Zero 30 5G ஆனது ரோம் கிரீன் மற்றும் கோல்டன் ஹவர் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என 2 வகைகளில் கிடைக்கிறது.
இதில் 5ஜி, 4ஜி வோல்டே, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. Infinix Zero 30 5G ரூ.15,000 முதல் ரூ.18,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS